தீபாவளி பண்டிகையொட்டி வீடுகள் தோறும் மக்கல் கங்கா ஸ்நானம் எனும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து தொடங்கி லட்சுமி பூஜை செய்து கொண்டாடி மகிழ்ந்து வாழ்வின் அனைத்து பலன்களையும் பெறுவோம்.
இந்த விரத நாளில் எண்ணெய், சியக்காய், வெந்நீர்.
எண்ணெய்யில் மகா லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, வெந்நீரில் கங்கா தேவி குடிகொண்டிருப்பாள். அதனால், அந்த நேரத்தில் நாம் எண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும்.
இந்த தினத்தில் சுவாமி படத்திற்கு முன் ஒரு கிண்ணத்தில் எண்ணெய்,சீயக்காய் வைத்து, எங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, வீட்டின் பெரியவர் மற்றவர்களின் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும்.
அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து வருவது கங்கா ஸ்நானம் என்று பெயர். அமாவசை தினத்தில், எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நம் உடலுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கின்றது. எண்ணெய் தேய்த்துக் கொண்டு கால் அல்லது அரை மணி நேரமாவது இளம் வெயிலில் நில்லுங்கள். உங்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் எண்ணெய் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.
அதோடு நாம் புதிதாக வாங்கி இருக்கும் உடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
பின்னர் புத்தாடைகளை அணிந்து, பெரியோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பின்னர் நன்றாக உணவை சுவைத்து உண்டு விட்டு, வாங்கி வைத்திருக்கும் பட்டாசைப் பெரியோரின் முன் வெடித்து மகிழலாம்.
இப்படி முறைப்படி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழுங்கள்.
