Home Uncategorized திருச்சியில் காவலர் கொலை – டிடி தினகரன் கண்டனம்

திருச்சியில் காவலர் கொலை – டிடி தினகரன் கண்டனம்

திருச்சி நவல்பட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

ரோந்து பணிக்கு சென்ற திரு.பூமிநாதன், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் எதுவும் கையில் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் கிடந்து போராடி உயிர்விட்டதாக வரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.

சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் இப்படி கொல்லப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது -டிடிவி தினகரன்

Exit mobile version