Home Uncategorized திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை  –  வரும் 12-ம் தேதி ஆலோசனை

திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை  –  வரும் 12-ம் தேதி ஆலோசனை

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

வரும் 12 ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆணையர் அரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் திருக்கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருக்கோயில்களுக்கான அறங்காவலர் நியமனம் குறித்தும்,தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள படி திருக்கோயில் விவரங்களுடன் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். யானைகள் பாராமரிப்பு, மற்றும் ஓதுவார் பணியிடங்கள் விபரம் திருக்கோயில்களில் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அதில் கூறப்படுகிறது.

Exit mobile version