Home Uncategorized சிறந்த குணச்சித்திர நடிகை செளகார் ஜானகி

சிறந்த குணச்சித்திர நடிகை செளகார் ஜானகி

சுமார் 70 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் கோலோச்சிவரும் நட்சத்திர நடிகை செளகார் ஜானகி. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், என்று பல மொழிகளில் 387 படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துச் சாதனை படைத்திருக்கிறார். 

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தார், அவரது தந்தை வேலைக்காக சென்னை வந்தபோது, அவருக்கு 12 வயது. போக் ரோடில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். அப்போது வானொலி நிலையத்தில் பாலர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அவரின் தமிழ் உச்சரிப்பைக் கேட்டு விஜயா ஸ்டூடியோவின் பி.என்.ரெட்டி அவரை பற்றி விசாரித்துவிட்டு அவரின் வீட்டிற்கு சென்று `சினிமாவில் நடிக்கிறாயா?’ என்று கேட்டபோது தயக்கமில்லாமல் `சரி’ என்று சொல்லிவிட்டார். முதலில் வீட்டில்  அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவசரம் அவசரமாக வரன் பார்த்து குண்டூரில் ரேடியோ இன்ஜினீயராக இருந்த ஸ்ரீனிவாசராவ் என்பவருக்கு அவரை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

Exit mobile version