திருக்கோயில் (ராகு தோஷ பரிகார தலம்) நவகிரக தலங்களில் இராகு தலம், திருக்குடமுழுக்கு பெருவிழா, ஆறாம் கால யாக சாலை பூஜை மற்றும் பரிவார தெய்வங்கள் குடமுழுக்குக்கு நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் முழுவதும் ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு குடமுழுக்குக்கு இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்புப் புகைப்படத் தொகுப்பு..

