சென்னை திண்டிவனம் பைபாஸ் மதுராந்தகம் அருகே திண்டிவனத்தில் நோக்கி சென்ற டிராக்டர் மீது அதே தடத்தில் சென்ற லாரி மோதியதில் டிராக்டர் டிரைவர் தூக்கி வீசபடுகிறார்.
இடது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருடன் போராடிக் கொண்டிருக்கிறார். தகவலறிந்த ஆம்புலன்ஸ் காவல்துறை எந்த உதவியும் செய்யாமல் அவர் உயிருடன் இல்லாத நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு மக்களோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையை நோக்கி வழக்கறிஞர் டாக்டர் தமிழ்வேந்தன் சென்று கொண்டிருக்கையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டிராக்டர் ஓட்டுநர் பரிசோதித்த போது அவருடைய இதயத்துடிப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
உடனே உடனே இதை அறிந்த வழக்கறிஞர் உடனடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் காவல் துறையிடம் வாதாடுகிறார் பிறகு டாக்டர் ஓட்டுனரை பரிசோதித்து அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்துகொண்டு உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நிலை தேறி வருகிறார்.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் ஒரு மனிதன் விபத்து நடந்து ஒரு மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில் அவருடைய உயிரை காப்பாத்த முன்வராத பொதுமக்களும், காவல்துறையினரும் உயிரை அலட்சியமாக நடத்தியதால் டிராக்டர் ஓட்டுநர் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்தது.
இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் வழக்கறிஞர் டாக்டர் தமிழ்வேந்தன் பல மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
