Home Uncategorized தமிழகத்தின் 5 தொகுதிகளில் நிச்சயமாக பாஜக எம்பி என்ற கணக்கில் பாஜகவின் தேசியத் தலைமை

தமிழகத்தின் 5 தொகுதிகளில் நிச்சயமாக பாஜக எம்பி என்ற கணக்கில் பாஜகவின் தேசியத் தலைமை

தமிழகத்தின் 5 தொகுதிகளில் நிச்சயமாக பாஜக எம்பி என்ற கணக்கில் பாஜகவின் தேசியத் தலைமை உறுதியாக இருக்கிறது.

1. கோவை – அண்ணாமலை
2. தென்சென்னை – தமிழிசை
3. கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்
4. திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
5. வேலூர் – ஏ.சி. சண்முகம்

இந்த 5 தொகுதிகளைத்தான் பாஜக முழுமையாக நம்பியது. ஆனால், தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும் கள நிலவரங்கள் மாறிவிட்டன.

கோவை, திருப்பூர் தொகுதிகளில் GST, பணமதிப்பிழப்பு மற்றும்  தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி தலைவர்கள் பற்றிய வாட்ஸ் அப் பதிவுகள் அண்ணாமலைக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால் அண்ணாமலை  தனது திருநெல்வேலி பயணத்தையே ரத்து செய்துள்ளார்.

கன்னியாகுமரியில் மீனவர் வாக்குகளை அஇஅதிமுக  பிரிக்காது என்ற நிலையில் பொன்னார் பின் தங்குகிறார்.

ஆளுநர் தமிழிசை வெற்றிக் கோட்டை நெருங்க கடுமையாகப் போராடுகிறார்.

திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ, ஆலங்குளம் பாஜக ஆதரவு எம்எல்ஏ, அம்பாசமுத்திரம் வேட்பாளரின் ஆதரவு எம்எல்ஏ அதாவது 6 இல் 3 MLA பாஜக ஆதரவு, ராதாபுரம் மணல் அதிபர்  ஆதரவு, பாளையங்கோட்டையில் ஜான்பாண்டியன் கூட்டணி, நாங்குநேரி வேட்பாளரின் சொந்த ஊர், சரத்குமார் ஆதரவு என்ற கணக்கில் பாஜகவின் ஒரே நம்பிக்கையாக திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் மட்டுமே இருக்கின்றார்.

ஏப்ரல் முதல்வாரத்தின் நிலவரப்படி,

1. தேனி – டிடிவி தினகரன்,
2. ராமநாதபுரம் – ஓ.பன்னீர்செல்வம்
3. தென்காசி – ஜான்பாண்டியன்
4. சிவகங்கை – தேவநாதன்

இந்த 4 தொகுதியில் பிரச்சார யுக்திகளை மாற்றினால், வெற்றியை நெருங்கலாம் என்று பாஜக தேசியத் தலைமைக்குத் தகவல் போயுள்ளது.

தொகுதி நிலவரத்திற்கு ஏற்ப,
மோடி, அமித்ஷா, யோகி, நிர்மலா, மத்திய அமைச்சர்கள்  வருகை பற்றி திட்டமிடுகிறார்கள்.

 தேனி தொகுதியில் டிடிவி தினகரன் அவரது  சித்தியான வி.கே. சசிகலா பெயர், படம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை சசிகலா அரசியல் பேச மாட்டார்.

 ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையே அதிகம் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளனர். கூட்டணிக் கட்சிகள், அமைப்புகளை OP ஜெயபிரதீப் பார்த்துக் கொள்வார்.

தென்காசி தொகுதியில் ஜான்பாண்டியன் அவரது தமமுக கட்சியின் கொடி, துண்டுகளை பயன்படுத்தக் கூடாது. அவரது கட்சியினரும் பாஜக துண்டு மட்டுமே அணிய வேண்டும்.

அண்மையில் பாஜகவில் சேர்ந்த கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்களை பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது.

அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகள் அந்தந்த தொகுதியில் மட்டுமே பணி செய்ய வேண்டும். தஞ்சாவூர், ராமதாதபுரம்  தொகுதியில் இருக்கும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சொந்த தொகுதிக்கு திரும்ப வேண்டும்.

RSS அமைப்பின் திண்ணைப் பிரச்சாரத்தை 9 தொகுதிகளில் மட்டும் தீவிரப்படுத்த வேண்டும்.

 பூத் கமிட்டி உறுப்பினர்களோடு இணைந்து  அமைக்கும் பணப்பட்டுவாடா தடுப்புக் குழு உறுப்பினர்கள் திமுக, அதிமுக கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தடுக்க வேண்டும்.

பணப்புகார் வருமிடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, பறக்கும் படை சோதனைகள் அதிகம்  நடக்கும்.

இவ்வாறு பல்வேறு அதிரடி திட்டங்கள்  வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version