Monday, March 16, 2026
HomeUncategorizedதமிழகத்தின் முதல் பிரம்மாண்டம் இயக்குனர், தயாரிப்பாளர், ஆனந்தவிகடன் நிறுவனர் அய்யா S.S. வாசன் அவர்கள் நினைவைப்...

தமிழகத்தின் முதல் பிரம்மாண்டம் இயக்குனர், தயாரிப்பாளர், ஆனந்தவிகடன் நிறுவனர் அய்யா S.S. வாசன் அவர்கள் நினைவைப் போற்றுவோம்

ஜெமினி ஸ்டூடியோவில்…. ஒரு மெஸ் இருந்தது. அதில் அந்த இளைஞர் வேலைக்குச் சேர்ந்து , நான்கு நாள் தான் ஆகி இருக்கும்..பெயர்… திரு. சுப்பாமணி.. 

அவருக்கு… ஐயர் (ஸ்ரீ. S. S. வாசன்) அவர்களின் ஆப்பீசில் இருந்து ஒரு அழைப்பு.. பயந்து நடுங்கிய படி போனார்… பிரம்மாண்ட டேபிளில் முன் தொள தொள கதர் சட்டையுடன்,  கதை விவாதத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீ. வாசன்..

“ஓ நீதான் சுப்பாமணியா? நாளைக்கு உன் அம்மாவுக்கு ஸ்ரார்த்தமாம், உன் அப்பா உன்னை வரச்சோல்லி போன் மூலம் எனக்குச்சொன்னார்… ஆகையினால் நீ நாளை லீவு போட்டு விட்டு, ஆபீஸில்  பணம் வாங்கக் கொண்டு போய் வா”… என்றார்…..” 

சுப்பாமணிக்கு தூக்கி வாரிப் போட்டது. அதிகம் படிப்பறிவில்லாத சுப்பாமணியின் தந்தை  எப்படியோ ஸ்ரீ. வாசன் அவர்களின் போன் நம்பரை தெரிந்து கொண்டு, முக்கிய கதை விவாதத்தில் இருந்த  அவருக்கே நேரடியாக  போன் செய்து  இருக்கிறார்.. 

ஸ்ரீ. வாசன் கொஞ்சமும் கோபப்படாமல்….. தவறாக நினைக்காமல், தாயார் ஸ்ரார்த்தம்  என்றதும் சுப்பாமணி யை… கூப்பிட்டு ஆவன செய்திருக்கிறார். . 

ஸ்ரீ. வாசன் அவர்கள் தன்  தாயாரிடம் அளவற்ற பக்தி, பாசம், மதிப்பு வைத்திருந்தார்.

விகடன், ஆப்பீஸ், ஸ்டடூயோ விவகாரங்களில் கூட தன் தாயாரை கலந்து ஆலோசித்து  தான் முக்கிய முடிவுகளை எடுப்பாராம்..

. தன்னைப்  போலவே எல்லோரும் தாயார் மேல் பக்தி வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பாராம்.. 

ஒருமுறை பாம்பே ரேஸ் கோர்சில் ஒரு குறிப்பிட்ட குதிரை தான் வெற்றி பெறும் என உறுதியாக நம்பினார், மற்றவர்கள் ” அது  வராது”… என அடித்துக்கூறினர்.

ஸ்ரீ. வாசன் அந்த குதிரையின் ஜாக்கி, டிரைனர்  முதலியவர்களை  கண்டு அதற்க்கு தனியான பயிற்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்தார். ரேசில் அந்தக்குதிரை பாய்ந்து முதலில் வந்து  விட்டதாம் . ₹. 60,000/= பரிசு.  

பணத்துடன் மெட்ராஸ் வந்த ஸ்ரீ. வாசன், வீட்டில் நுழைந்ததும். தன் தாயாரை அழைத்து பணத்தை அவர் கையில் கொடுத்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து இருக்கிறார்,

 அவரோ “இனிமேல் ரேஸ் ஆட மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தால் தான் பணத்தை தொடுவேன்… உனக்குக்கும் பயன் படுத்த அனுமதிப்பேன்” என்று இருக்கிறார்,

 ஸ்ரீ. வாசன் அவர்களும் அப்படியே சத்தியம் செய்து கொடுத்ததடன், இறுதிவரை அதை கடை பிடித்தாராம். குதிரையின் பெயர் ஜெமினி 

சந்திரலேகா படம் அவர் எடுத்த போது, பணம் தண்ணீராக செலவழித்தது.. . ஸ்ரீ. வாசன் அவர்களுக்கே… அச்சம் வந்தது,.. தன் தாயாரிடம் “படம் தோல்வி அடைந்தார் நாம் எல்லாம்   இழந்து நடுத் தெரு வர  நேரிடும்” என்றாராம். 

அதற்க்கு அவர், ” நாம் என்ன பரம்பரை பணக்கார்களா. ஒன்றும் இல்லாமல் இருந்தவர்கள் தானே, அது நமக்கு பழகியது தானே, புதிது அல்லவே, அந்த நிலைமை வந்தால் தயங்காமல் சந்திக்கலாம்…… என தைரியம் ஊட்டினார்… . படம் மா பெரும் வெற்றி,….. உலகறிந்தது

ஸ்ரீ. சுப்ரமணியன் சீனிவாசன் (S. S. வாசன்) 4 ஜனவரி 1904 இல்   திருத்துறை பூண்டியில் பிறந்தார். 

தன் இரண்டாவது வயதிலேயே, தந்தையை இழந்த திரு. வாசன் அவர்களை அவர் தாயார் மாது ஸ்ரீ பாலாம்பாள் அவர்கள்……உடல் நலமில்லாத தன்  தந்தை வீடு வந்து… 

அவர் … ஒரு சமிஸ்கிர பண்டிதை, டியூஷன் எடுத்தும்… சமையல் வேலை செய்தும் ஸ்ரீ. வாசனையும், தன் உடன் பிறந்தவர்களையும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கினார்

ஒரு தாயார் எப்படி இருக்க வேண்டும்…? அவரிடம் மகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்க்கு உதாரணமாக திகழ்ந்தவர்கள். அவர்கள் இருவரும்…. . 

படிக்க, வேலை தேடி மதராஸ் வந்த வாசன்… எல்லா தொழில்களிலும் புகுந்து புறப்பட்டார்… குறிப்பாக பத்திரிகை விளம்பரம்… மெயில் ஆடர் பிஸினஸ்,

, ரிஸ்க்  அவருக்கு ரஸ்க்…

 தைரியம்.சாதுர்யம், நேர்மை, தன்நம்பிகை இவைகள் தான் அவர் மூலதனம். 

விகடகவி “பூதலூர் வைத்தியநாத ஐயர்” என்பவர் நடத்தி வந்த, நஷ்டத்தில் இயங்கி வந்த “ஆனந்தவிகடன் “பத்திரிகையை 1928, இல் ஸ்ரீ. வாசன் வாங்கினார்… 

கல்கி, மாலி, தேவன், சதாசிவம், கோபுலு, சில்பி, என பல திறமையாளர்களை சேர்த்துக் கொண்டார், உருவாக்கினார்…

பத்திரிகை சர்குலேஷனை உயர்த்த இன்று என்ன என்ன உத்திகள் கையாளப்படுகிறதோ… அவற்றை எல்லாம் அன்றே கையாண்டு வெற்றிகண்டார்… . ஆனந்த விகடன் ஒரு வீட்டுப் பெயர் ஆனது. 

1940   இல்  தீயினால் சேதமடைந்த ஒரு  திரைப்பட ஸ்யூடியோ வை வாங்கி அதற்க்கு ஜெமினி ஸ்யூடியோ எனப்பெயர்  இட்டு.. No looking back…. The rest is History…. 

வேலை என்று வந்துவிட்டால், அவருக்கு சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில் வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப்பார். அதிலும், ‘சந்திரலேகா’ படப்பிடிப்பின்போது அவர் பட்டபாடு…. 

 ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய சமஸ்தானமாகக் காட்சி அளிக்கும். ஆனால், “அந்த சமஸ்தான மன்னர்? ராஜா எங்கே?” என்று கேட்டால், ஒரு தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல் மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு, அவர் எங்கும் இருப்பார்.

 புதிதாய் அமர்த்திய தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்… “எங்கே தம்பி, முதலாளி? இதைப் பார்க்கவே வரமாட்டேங்கறாரே?”

“பட முதலாளி இல்லியா… எத்தினியோ வேலை இருக்கும்!”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள் அருகில் நிற்கும் எளிய மனிதர்தான் முதலாளி என்பது தெரியவில்லை. அந்த முதலாளிக்கும், “நான்தான் உங்கள் முதலாளி” என்று சொல்லத் தோன்றவில்லை. 

ஏன் என்றால், தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை.

” N. S. K  அவர்கள் ஒர் வழக்கில் சிக்கி சிறை வாசம் தீர்ப்பு வநெதபோது. திரு. S. S. வாசன் திருமதி T. A. மதுரத்தை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஒரு கவரை கொடுத்து  இதில் ஒரு தொகை வைத்து இருக்கிறேன்… தைரியமாக இருங்கள் என ஆறுதல் கூறுனாரம்…

 பிறகு  கணவரைத் திறந்து பார்த்தபோது அதில் ₹25,000/=  இருந்ததாம்,.. அக்காலத்தில்  பெருந் தொகை…… (S. V. சகஸ்ரநாமம் எழுதிய “திரும்பிப் பார்க்கிறேன்” புத்தகத்தில் இருந்து) 

அவரைப்பற்றி  பேராசியர்… கல்கி…. ஒரு லட்சம் ரூபாய் அதிக லாபம் வந்தாலும் சரி….. ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட்டமே வந்தாலும் சரி…. ஸ்ரீ. வாசன் அவர்களின் முகத்தில் எந்த சலனமும், மாற்றமும் இருக்காது….” 

தென் இந்திய, இந்திய, உலகத் திரைப்பட, பத்திரிகை உலகில் முத்திரை பதித்தார் 

செயற்கரியன  செய்த அவர்  26 ஆகஸ்டு 1969 இல் மறைந்தார்.. 

=

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments