தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட அதிகமான நிதியை மத்திய அரசு தந்துள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையை துவக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது. மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குத்தான் கொடுத்துள்ளோம்.
வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். 2014 முதல் 2023 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. ஆனால் பெற்றதைவிட அதிகமாக அதாவது, ரூ.6.96 லட்சம் கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.
ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவு சாலை திட்டத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

