Tuesday, July 28, 2026
Homeசெய்திகள்தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் அனுப்ப 3 மாதங்கள் தடை!

தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் அனுப்ப 3 மாதங்கள் தடை!

தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குச் சாதாரணக் கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு அதிரடித் தடை விதித்துப் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான கனிமங்களின் தட்டுப்பாட்டைப் போக்கவும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதக் கனிமக் கடத்தலைத் தடுக்கும் வகையிலும், கனிம வளங்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை தீவிரமாகக் கண்காணித்துச் நடைமுறைப்படுத்துமாறு எல்லைையோரச் சோதனைச் சாவடிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments