நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த ஜூலை 12-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் சூட்டி இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகனின் நெற்றியில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
