Saturday, March 7, 2026
HomeUncategorizedதனுஷின் ‘டி44’ படத்தின் தலைப்பு அறிவிப்பு

தனுஷின் ‘டி44’ படத்தின் தலைப்பு அறிவிப்பு

தனுஷ் – மித்ரன் ஜவகர் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மித்ரன் ஜவகர் ஏற்கனவே, யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments