Home Uncategorized தொடங்கியாச்சு நிஜப் போர்

தொடங்கியாச்சு நிஜப் போர்

நம் இந்திய ராணுவம் போர் ஒத்திகை ஒன்றை இன்று, அதாவது புதன்கிழமை  நடத்தப் போவதாக அற்வித்து இருந்த நிலையில், பாகிஸ்தான் மீது  அதிரடியாக  தாக்குதல் நடத்தி உள்ளது. போர் ஒத்திகைக்கு பின்பே இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் நினைத்திருக்கும். ஆனால் போர் ஒத்திகை ட்ரில் என்று பாகிஸ்தானை ஏமாற்றி இந்தியா இன்றே இரவோடு இரவாக பக்காவான அட்டாக் செய்துள்ளது. அதிகாலை  2 மணி அளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஆம்.. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் ஒரு முக்கிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ், இந்திய படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தியாவின் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்திய இடங்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் PoK-யில் அமைந்துள்ள பஹவல்பூர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் மீது இலக்குத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.இந்தியாவின் இந்தத் தாக்குதல் அண்டை நாட்டுடன் போரிடும் நோக்கத்துடன் நடத்தப்படவில்லை என்றும், இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எந்த ராணுவத் தளங்களும் இலக்கு வைக்கப்படவில்லை எனவும், இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியா மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்தது எனவும் செய்திக்குறிப்பு கூறுகிறது

Exit mobile version