Home Uncategorized தருமபுரம் ஆதீனம் 26வது மடாதிபதியின் 4ம் ஆண்டு குருபூஜை விழா

தருமபுரம் ஆதீனம் 26வது மடாதிபதியின் 4ம் ஆண்டு குருபூஜை விழா

மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் உள்ளது தருமபுரம் ஆதினம். தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்களில் இந்த மடம் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த குருபூஜை விழாவையொட்டி, இன்று காலை தருமபுரம் மேல வீதியில் உள்ள ஆனந்தபரவாசர் பூங்காவில் அமைந்துள்ள அவரது குருமூர்த்திக்கு ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகசன்னிதானம் எழுந்தருளி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தார்!!! “உன்னை நினைத்து மறையும் என் ஆவி” நூலை ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகசன்னிதானம் வெளியிட லண்டன் சிவன் கோவில் சிவஸ்ரீ நாகநாத குருக்கள் பெற்றுக் கொண்டார்!!! தருமையாதீனத்தின் 26வது குரு மணிகள் குருபூசையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி திரு பாலசுப்ரமணிய ஓதுவாருக்கு சத்திரசாதியால் 10000, காசிமடத்து அறக்கட்டளை மூலம் 1000 வழங்கப்பட்டது!!! முன்னதாக கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு ஸ்ரீ சொக்கநாதர் பூஜை, 3 பேருக்கு பூஜை, 5 பேருக்கு சனிகாலிங்க பூஜை, 18 பேருக்கு சமயதீக்ஷை வழங்கப்பட்டது.

 

Exit mobile version