Sunday, March 15, 2026
HomeUncategorizedதுப்புரவுப் பணியாளரை பாராட்டிய எஸ்.வி.சேகர்

துப்புரவுப் பணியாளரை பாராட்டிய எஸ்.வி.சேகர்

அன்புள்ள, மரியாதைக்குரிய  மேரி  அவர்களுக்கு வணக்கம்.
துப்புரவுப்  பணியாளரான  உங்கள் நற்செயலை  பாராட்டவே இக்கடிதம்.
தவறுதலாக குப்பையில் போடப்பட்ட 100 கிராம் எடையுள்ள, 
ரூபாய் 5 லட்ஷம் மதிப்புள்ள தங்கத்தை, குப்பையை பிரிக்கும் போது 
கண்டுபிடித்த நீங்கள், போலீசாரை உடனடியாக தொடர்பு கொண்டு 
அந்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த நல்ல மனத்தையும் ,குணத்தையும் 
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
 பணமே முக்கியம் ,நேர்மையாக வாழ்வது மிகக்கடினம் என 
நினைக்கும் இக்காலத்தில் ,  வறுமையிலும் , ஏழ்மையிலும் அடுத்தவர் 
பொருள் நமக்கு வேண்டாம் என 
நினைத்த உங்களின் மிகப்பெரிய நேர்மையான இச்செயலை பாராட்டி 
என் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ரூபாய் 5000/- தங்களுக்கு 
வழங்குவதில் பெருமை அடைகின்றேன். 
தங்களுக்கும் ,தங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து செல்வங்களையும் 
நோயற்ற வாழ்வையும் வழங்க ஆண்டவனை வேண்டுகின்றேன்.
என்றும் அன்புடன் 
S VE SHEKHER

 

முழு காணொளியை பார்க்க…

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments