Home Uncategorized இளநீர் விலை கிடுகிடு உயர்வு! மக்கள் அதிர்ச்சி!

இளநீர் விலை கிடுகிடு உயர்வு! மக்கள் அதிர்ச்சி!

வரத்து குறைந்ததாலும், இளநீர் தேங்காய்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அதன் விலை அதிகரித்துள்ளது. நகரின் சில பகுதிகளில் ஒரு தேங்காய் 80 வரை விற்பனையாகிறது.

இளநீரில் பொட்டாசியம், கேல்சியம், மாங்கனீசு, ஆக்ஸிஜனேற்றிகள், அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளன. இளநீரில் சர்க்கரை, கார்போஹைடரேட், காலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இதனால் கோடையில் இளநீர் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைப்பதோடு ஆரோக்கியத்தையும் தரும்.

இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் முழு நன்மையை பெறலாம் என்று சிலருக்கு ஐயம் இருக்கும். காலையில் இளநீரை குடிப்பதே சிறந்ததாகும். இளநீருடன் நம் நாளை தொடங்குவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றது. காலையில் இளநீர் அருந்துவது உங்களுக்கு புத்துணர்ச்சியை தந்து நன்றாக உணரச் செய்யும்

இளநீரில் ஆரோக்கியம் தரும் விஷயம் எண்ணற்றவை இருந்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்கள் நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே இளநீரை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Exit mobile version