Home செய்திகள் “எதிர்க்கட்சிகள் இல்லை.. அனைவரும் தோழமைக் கட்சிகள்” – பிரேமலதா விஜய்காந்த் பாராட்டு!

“எதிர்க்கட்சிகள் இல்லை.. அனைவரும் தோழமைக் கட்சிகள்” – பிரேமலதா விஜய்காந்த் பாராட்டு!

“நேற்று அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்த முதலமைச்சர், எதிர்க்கட்சியில் எதுவும் இல்லை; அனைத்தும் தோழமைக் கட்சிகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அன்புத்தம்பி விஜய் அவர்கள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஏற்கனவே அதிமுகவின் ஒரு பிரிவினரும், அமமுக எம்.எல்.ஏ-வும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது தேமுதிகவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் முதலமைச்சரின் அணுகுமுறை, நாளைய வாக்கெடுப்பை ஒரு சம்பிரதாய நிகழ்வாக மாற்றியுள்ளதோடு, தவெக அரசுக்கான பலத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version