தமிழகத்தில் முதன்முறையாக கோவைச் சேர்ந்த ஒரு தனியார் பேருந்து நிறுவனம் தனது பேருந்துகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது, பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொரு பொது மக்களிடையே நல்ல பெயரை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போது சில்லறை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தில் க்யூ ஆர் கோடு அமைத்துள்ளனர். இந்த வசதி பேருந்துகளில் செல்லும் ஒவ்வொரு பயணிகளுக்கு எளிதாக உள்ளது என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
