முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
