Monday, March 30, 2026
Homeசெய்திகள்SC விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக மனு!

SC விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக மனு!

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களது பட்டியலின (SC) அந்தஸ்தை இழப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று வழங்கிய தீர்ப்பை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில், தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் சாதிச் சான்றிதழ்களைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மதம் மாறியவர்கள் போலிச் சான்றிதழ் மூலம் போட்டியிடுவதைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சாதிச் சான்றிதழ்கள், மத மாற்றம் செய்யவில்லை என்பதற்கான உறுதிமொழிப் பத்திரம் ஆகியவற்றைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும், இதற்காகத் தனி அதிகாரிகளை நியமித்து கள ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments