Home உலகம் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் சட்டவிரோதம்! அமெரிக்க நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!

டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் சட்டவிரோதம்! அமெரிக்க நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!

அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான இறக்குமதி வரிகள் சட்டவிரோதம் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

IEEPA (International Emergency Economic Powers Act / சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம்) சட்டத்தின் பெயரில், அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி இன்றி டிரம்ப் ஒருதலைப்பட்சமாக விதித்த வரிகள் அதிகார வரம்பு மீறல் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

 இதனால், டிரம்ப் அரசு சீனா, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு விதித்த கூடுதல் இறக்குமதி வரிகள் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளன.

தீர்ப்பு உடனடியாக அமலுக்கு வராது; இறுதி முடிவு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தான் வரும். 

தீர்ப்பை கடுமையாக விமர்சித்த டிரம்ப், “இது நாட்டுக்கு பேரழிவு” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version