Home Uncategorized ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிடுகிறார்.

சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக 1996ஆம் ஆண்டு முதல் 2006 வரை லட்சுமியே போட்டியின்றி தேர்வாகி வந்தார்.

அதன் பின் தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட மேல்மருவத்தூர், தற்போது மீண்டும் பொது ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தலைவர் பதவிக்கு போட்டியிட சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லட்சுமி பங்காரு அடிகளார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில், சொத்து மதிப்பு 25 கோடியே 57 லட்சம் ரூபாய் என அவர் குறிப்பிட்டுள்ளார். லட்சுமி பங்காருவுக்கு மாற்று வேட்பாளராக, அவரது மகன் செந்தில்குமாரும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 27 கோடியே 56 லட்சம் என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version