வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள், தனியார் பொருட்காட்சிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தளர்வுகள் வருமாறு:-
தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி
நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்
இன்று முதல் அனைத்து விதமான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படலாம்
டியூசன் சென்டர், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இன்று முதல் செயல்படலாம்
நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம்
இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர் பங்கேற்கலாம்
நவம்பர் முதல், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களுக்கு அனுமதி
நவம்பர் 1 முதல், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைகளுக்கு செல்லலாம்
நவம்பர் 1 முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் இயங்க அனுமதி.
