Home Uncategorized வாராக் கடன்களை தள்ளுபடி செய்த வங்கிகள்!

வாராக் கடன்களை தள்ளுபடி செய்த வங்கிகள்!

 கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.1.7 லட்சம் கோடி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளில் அதிகபட்சமாக:

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.18,317 கோடி,

இந்திய யூனியன் வங்கி ரூ.18,264 கோடி,

SBI வங்கி ரூ.16,161 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன

தனியார் துறை வங்கிகளில் அதிகபட்சமாக:

HDFC வங்கி ரூ.11,030 கோடி,

Axis வங்கி ரூ.8,346 கோடி,

ICICI வங்கி ரூ.6,198 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன வாரக் கடன்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய வங்கிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது

இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் 81.3 சதவீத தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன்களை மீட்க வங்கிகள் தவறிவிட்டதாக, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் RTI அளித்த பதில் மூலம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது

இந்திய வங்கிகளால் வசூலிக்க முடியாத வாராக் கடன்கள் பெருமளவில், பெருநிறுவன முதலாளிகளுக்கு வழங்கப்பட்டவை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்

Exit mobile version