தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்னது இந்த ஆண்டு செப்டம்பரில் அதிகளவு வெப்பம் பதிவாகி வருவதற்கு, தொடர்ந்து ஒரு மாதமாக மழை மற்றும் மேகங்கள் இல்லாததும், வறண்ட காற்று வீசுவதும் வெப்பம் அதிகரிக்க காரணம் வட மாநிலங்களில் வரும் நாட்களில் காலை வெயிலும், மாலையில் ஆங்காங்கே மழையும் பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் வறண்ட வானிலயே தொடரும்.
25ம் தேதிக்குப்பின் மழை அதிகமாகும் என கணிக்கிறோம். இப்படி தொடர்ந்து 30 – 40 நாட்கள் வெப்பம் இப்படி இருந்தால், அதன் இறுதியில் நல்ல மழையை நாம் பெறுவோம்.
அப்படி இம்முறையும் செப்டம்பர் இறுதி முதல் அக்டோபர் தொடக்கம் வரை நல்ல மழையை பெறுவோம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
