Home Uncategorized வங்கிக் கொள்ளையில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு

வங்கிக் கொள்ளையில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு

சென்னையில் தனியார் வங்கியான ஃபெட்பேங்க்வில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையில் அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜுக்கு தொடர்புள்ளது என்பதை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து 3.5 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் காவல் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

அமல்ராஜின் உறவினர் சந்தோஷ் என்பவர் தங்கம் கடத்தல் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படவுள்ளார்.

Exit mobile version