Home Uncategorized வந்தே பாரத் ரயிலில் மதுரை வந்த கவர்னர் தமிழிசை பேட்டி விபரம்

வந்தே பாரத் ரயிலில் மதுரை வந்த கவர்னர் தமிழிசை பேட்டி விபரம்

தென்பகுதி புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே இருந்தது. ஏதாவது வளர்ச்சி வராதா என மக்கள் ஏங்கினார்கள். இப்பொழுது வளர்ச்சி ஆரம்பமாகிவிட்டது
தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள். தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை நம்ப வேண்டாம். பிரதமர் தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார் .

இந்த ரயிலில் சாதாரண குடிமகளாக  மக்களோடு மக்களாக வந்தேன்.இதில் பயணித்த மக்களின் மகிழ்ச்சியை  பிரதமரிடம் சமர்பிக்க உள்ளேன்.

நிறுத்தங்களை அதிகரித்தால் வேகத்தை குறைக்க வேண்டியது இருக்கும்.

இந்த ரயிலில் ஒவ்வொன்றையும் மக்கள் விரும்புகிறார்கள். ரயிலில் உணவு பிடித்துள்ளது, ரயில் பெட்டி பிடித்துள்ளது. அதிலுள்ள வசதிகள் பிடித்துள்ளது, கழிவறை  உட்பட எல்லாவற்றையும் பயணிகள் விரும்புகிறார்கள்.

தமிழக எம்.பிக்கள் கூடுதல் ரயில் திட்டங்கள் கேட்டார்கள் வந்தே பாரத் ரயிலே வந்துவிட்டது. இனி வேற என்ன வேண்டும் ?

Exit mobile version