நடிகர் விஜய் என்றால் கூடவே ஒரு சர்ச்சையும் சேர்ந்து வரும். அந்த வகையில், சமீபத்தில் தனது வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு பேசிய விஜய் பேச்சு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையம் கவரந்து ஈர்த்து இருந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சமீபத்தில் விஜயின் தாயார் ஷோபனா சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதில், அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பிராத்தனை செய்தேன்” என்றும் மேலும், தனது வாரிசு படம் நன்றாக ஓடவேண்டும் என்றும் வேண்டியதாக கூறினார்.
பின்னர் அவரிடம், விஜய் அரசியல் வருகையை பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்க்கு அவர், “விஜய் அரசியல் வருவதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. அது அவர் கையிலும் , கடவுள் கையிலும் தான் இருக்கிறது” என்று பதில் அளித்தார் .
அதன் காணொளியை கீழே பார்க்க…
