Thursday, April 30, 2026
HomeUncategorized2025-26ம் கல்வியாண்டு சி.பி.எஸ்.இ.யில அதிரடி மாற்றம்

2025-26ம் கல்வியாண்டு சி.பி.எஸ்.இ.யில அதிரடி மாற்றம்

2025-26ம் கல்வியாண்டு சி.பி.எஸ்.இ-க்கு ஒரு புது தொடக்கம்! பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்து, ஆலோசனைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது சி.பி.எஸ்.இ.

140வது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த சீர்திருத்தங்களுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது! சி.பி.எஸ்.இ அதிகாரிகள் சொல்வது என்னவென்றால்:

12ம் வகுப்பு அக்கவுன்டன்சி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு சூப்பர் சலுகை! இனி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், சதவீதம் கணக்கிட என்று எல்லாம் செய்யும் சாதாரண கால்குலேட்டரை பரீட்சையில் பயன்படுத்தலாம்.

விரைவில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகும். புதிய கல்விக் கொள்கையும், சர்வதேச மதிப்பீட்டு முறைகளும் இதற்கு உந்துதலாம்! அதுமட்டுமா? விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மதிப்பிட “ஆன் ஸ்கீரின் மார்க்கிங்” (OSM) என்ற புது முறையும் அறிமுகமாகிறது.

மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! புதிய மறுமதிப்பீடு முறையால் எல்லாம் வெளிப்படையாகத் தெரியும். மாணவர்களுக்கு நம்பிக்கையும், நிம்மதியும் கிடைக்கும்!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments