Thursday, April 9, 2026
HomeUncategorizedஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பவித்ரோத்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பவித்ரோத்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி, புரட்டாசி மாதம் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் நாளை (14.09.2024) தொடங்குகிறது. முதல் நாளான நாளை காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு யாகசாலை வருகிறார். 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருள்கிறார். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார்.

இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். / பூ பரத்திய ஏகாதசி / யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும், இதனால் இந்நிகழ்ச்சி ‘பூ பரத்திய ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது.

அத்துடன் கோயிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட் டிருக்கும். எனவே இதற்கு நூழிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம் பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத் திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு மேற்கில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்த பவித்ரோத்சவத் தின்முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘பூச்சாண்டி சேவை’ எனப்படும் அங்கோபாங்க சேவை நாளை மறுதினம் மதியம் நடக்கிறது. இந் நிகழ்ச்சி மதியம் 2 முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். / பூச்சாண்டி சேவை / பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேனிமுழு வதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர்.

இந்த காட்சி பார்வைக்கு அச்ச மூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments