Thursday, April 23, 2026
HomeUncategorizedசபரிமலை மகரவிளக்கு பூஜை - முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம்

சபரிமலை மகரவிளக்கு பூஜை – முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது.

அதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி பூஜை காலத்தில் தினமும் 80,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். இணையம் மூலம் முன்பதிவு செய்யும் போது எந்த வழியாக யாத்திரையை மேற்கொள்வது என்பதை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.

இம்முறை நிலக்கல், பம்பை பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் நிறைவு பெற உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments