திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் இருக்கும் இரண்டு பேக்கரிகளில் நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, கேக் மற்றும் பிரட் தயார் செய்வதற்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
அழுகிய முட்டைகளில் கேக்: இதையடுத்து, சுமார் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் அழுகிய முட்டைகளைக் கொண்டு தயார் செய்த 215 கிலோ பேக்கரி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
பின் அந்த பேக்கரிகளின் உணவு பாதுகாப்பு உரிமத்தையும் அதிகாரிகள் ரத்து செய்து, தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு கடைக்கு சீல் வைத்தனர்.

