டாடா குழுமத்தை இந்தளவுக்கு மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக மாற்றியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது.
இவரது காலத்தில் தான் டாடா நிறுவனம் பெரிய வளர்ச்சியை அடைந்தது. இம்மாத தொடக்கத்தில் ரத்தன் டாடாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த அக்.9ம் தேதி அவர் காலமானார்.
இதற்கிடையே ரத்தன் டாடாவின் உயில் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி சொத்திற்கான இந்த உயிலில், ரத்தன் டாடா தனது செல்ல நாய் டிட்டோவை குறிப்பிடத் தவறவில்லை.
தான் போனாலும் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் டிட்டோவை வாழ்நாள் முழுக்க கவனித்துக் கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை ரத்தன் டாடா செய்துவிட்டே சென்றுள்ளார்.
அதன்படி டாடாவின் நீண்ட கால சமையல்காரரான ராஜன் ஷாவால் டிட்டோவை பார்த்துக் கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டு அதற்காக கொஞ்சம் சொத்துகளை வழங்கியுள்ளார்.

