Thursday, March 5, 2026
HomeUncategorizedதடுப்பூசி குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்வது தான் சிறந்தது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

தடுப்பூசி குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்வது தான் சிறந்தது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

மத்திய அரசு தடுப்பூசி கையிருப்பு குறித்து மக்களிடம் சொல்ல கூடாது என  கூறியிருக்கும் நிலையில், மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பது தான் சரியாக இருக்கும் என தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்திற்கு 85,000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்து இருக்கிறது. 

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியில், தடுப்பூசி எண்ணிக்கையை வெளியே சொல்லக்கூடாது என மத்திய அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளது. தடுப்பூசி கையிருப்பு குறித்து சொல்லாமல் இருந்தால் மக்களுக்கு தெரியாமல் போய்விடும். மக்கள் தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருந்து ஏமாறும் நிலை ஏற்படும். தடுப்பூசி குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்வது தான் சிறந்தது.

தமிழகத்திற்கு இதுவரை வந்த தடுப்பூசி டோஸ்கள் 1,01,63,000. போடப்பட்டுள்ள டோஸ்கள் 97,62,957. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments