Saturday, March 7, 2026
HomeUncategorizedவீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்ட ஞானசேகரன் - மேலும் 7 திருட்டு வழக்குகளில் கைது

வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்ட ஞானசேகரன் – மேலும் 7 திருட்டு வழக்குகளில் கைது

யார் சார் புகழ் ஞானசேகரன் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் என 20 வழக்குகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

2022-24 வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள பெரிய வீடுகளில் காரில் சென்று திருட்டில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்தார்.

முதற்கட்டமாக பள்ளிக்கரணையில் 7 வீடுகளில் திருடியதை ஞானசேகரன் ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் தற்போது கைது செய்யபப்ட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments