Wednesday, March 4, 2026
HomeUncategorizedஇந்துக் குடும்பங்களுக்கு உள்ளூர் தர்கா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் -நயினார் நாகேந்திரன் கண்டனம்

இந்துக் குடும்பங்களுக்கு உள்ளூர் தர்கா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் -நயினார் நாகேந்திரன் கண்டனம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தின் விவசாய நிலங்கள் வக்ஃப்-க்கு சொந்தமானது எனவும், உடனே இடத்தை காலி செய்யாவிட்டால் எங்களுக்கு வரி கட்ட வேண்டும் எனவும் சுமார் 150 இந்துக் குடும்பங்களுக்கு உள்ளூர் தர்கா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் கடும் கண்டனத்திற்குரியது.

இதுபோன்ற நிகழ்வுகளே நம் நாட்டில் வக்ஃப் சட்டத் திருத்தங்கள் ஏன் தேவைப்பட்டது என்பதற்கான சான்றினை வழங்குகிறது.

ஆகவே, பல தலைமுறைகளாக அந்த கிராமத்தில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை சட்டவிரோதமாக துரத்தும் நோக்கில் செயல்படுவோர் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென முதல்வர் திரு. MK.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

அம்மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவில்லை என்றால், அந்த கிராமத்திற்கு சென்று ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக பாரதிய ஜனதா கட்சி அஞ்சாது என்பதையும் திமுக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்!

– மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன்

All reactions:

347347

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments