Saturday, March 7, 2026
HomeUncategorizedவெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் - வானிலை மையம் அறிவிப்பு

வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் – வானிலை மையம் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை மேற்கண்ட கத்தரி வெயில் காலத்தில் 113 டிகிரி வரை சென்றுள்ளது.

இந்த ஆண்டும் கோடை காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இருப்பினும், வெப்ப சலனம் மற்றும் கடல் வெப்ப நீரோட்டம் ஆகிவற்றின் காரணமாக மழை கொட்டித் தீர்க்கும் என வெயிலும், மழையும் மாறி மாறி வாட்டி வதைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று (21.04.2025) மாலை 5:30 மணிக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவானது: கரூர் – 39.5°C (முன்னணியில்) திருச்சி – 39.1°C மதுரை விமான நிலையம் – 39.1°C சேலம் – 39°C ஈரோடு – 38.8°C வேலூர் – 38.6°C (பல நாட்களாக முதலிடத்தில் இருந்தது, இன்று இரண்டாம் நிலை) மதுரை நகரம் – 38.4°C திருத்தணி – 38°C தர்மபுரி – 38°C

இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது.

அதன் காரணமாக இன்று முதல் 27ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாக இருக்கும்.

சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி வரை இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments