பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் இன்று முதல் 3 நாட்கள் நேரில் சந்திக்க அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டிருக்கிறார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று முதல் நடைப்பெறும்
இந்த சந்திப்பின்போது, பாமகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் சந்திக்க உள்ளார். 38 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் இந்த சந்திப்பில் கண்டிப்பாக பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், அவர்களுடன் ஆலோசனை நடத்தவும் இருக்கிறார். ராமதாஸ் உடனான மோதலுக்கு நடுவே அன்புமணி விடுத்து இருக்கக்கூடிய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

