Friday, February 6, 2026
HomeUncategorizedஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி போகும் என்பது உண்மையா? காரணம் பார்ப்போம் வாங்க!

ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி போகும் என்பது உண்மையா? காரணம் பார்ப்போம் வாங்க!

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று தான் ஆட்டுக்கால் சூப். இந்த சூப்பை செய்து கொடுத்தால் வேண்டாம் என்று யாருமே கூறமாட்டார்கள். பொதுவாக மட்டன் சாப்பிடுவதற்கும், ஆட்டுக்காலை சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மட்டனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே புரோட்டீனை அதிகம் பெற நினைப்பவர்கள் மட்டனை சாப்பிடலாம். ஆனால் ஆட்டுக்காலை ஒருவர் சூப்பாக சாப்பிடுவதன் மூலம், அதிலிருந்து கொலாஜன், ஜெலாட்டின், கிளைகோஸ்அமினோ கிளைகான்கள், காண்ட்ராடின் போன்றவை கிடைக்கின்றன. இதில் கொலாஜன் என்பது நமது திசுக்களில் உள்ள ஒருவிதமான புரோட்டீன் ஆகும். இது தவிர ஆட்டுக்காலை நீரில் கொதிக்க வைக்கும் போது சில வகையான அமினோ அமிலங்களான கிளைசீன் போன்றவையும் அந்த நீரில் வெளியிடப்பட்டு, நமக்கு கிடைக்கின்றன.” 

பொதுவாக கொலாஜனை உணவில் இருந்தோ அல்லது சப்ளிமெண்ட்டுகளாகவோ மூட்டு வலி உள்ளவர்கள் எடுத்து வந்தால், அதன் மூலம் மூட்டு வலியில் உள்ளவர்களின் மூட்டுக்களில் உள்ள காயங்களை குறைத்து, வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூட்டு வலி உள்ள ஒரு குழுவினருக்கு ஆட்டுக்கால் சூப் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. அதில் உள்ளவர்களுக்கு இருந்த மூட்டு வலிக்கான அறிகுறிகள் குறைந்திருப்பது தெரிய வந்தது. இதற்கெல்லாம் காரணம் ஆட்டுக்காலில் உள்ள கொலாஜன், ஜெலாட்டின், கிளைசீன் என்னும் அமினோ அமிலம் போன்றவை தான் என்றும் ஆய்வு குழுவினர் கூறியுள்ளனர்.

முக்கியமாக ஆட்டுக்கால் சூப்பை வழக்கமாக செய்வது போன்று செய்து குடிக்காமல், ஆட்டுக்காலை நீரில் போட்டு குறைவான தீயில் குறைந்தது 10-12 மணிநேரம் கொதிக்க வைத்து, அந்த சூப்பைக் குடிக்கும் போது, ஆட்டுக்காலில் உள்ள அனைத்து சத்துக்களும் முழுமையாக உடலுக்கு கிடைத்து, மூட்டு வலியில் இருந்து இன்னும் நல்ல நிவாரணம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.

மொத்தத்தில் ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி பறந்துபோகும் என்பது உண்மை தான். அதுவும் ஆட்டுக்காலை பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சமைத்த விதத்தில், அதாவது 10-12 மணிநேரம் குறைவான தீயில் ஆட்டுக்காலை நீரில் கொதிக்க வைத்து குடிக்கும் போது இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments