ஸ்டார்ட் …ஆக் ஷன்..
அத்தியாயம். 5.
எஸ்.. எஸ்.. வாசன்.
S.S.Vasan.
யானையை கட்டி தீனி போடுவது எவ்வளவு கஷ்டம்?
திரைப்படம் எடுப்பது எவ்வளவு சிரமம்?
இரண்டையுமே.. சேர்த்து …செய்து பார்த்து.. சாதனைப் படைத்தவர் தான் திரு. எஸ். எஸ்.. வாசன்.. அவர்கள்..
அதுவும்.. ஒரு யானை.. இரு யானை அல்ல..
யானைப் பட்டாளமே திரையை அதிர வைத்த படத்தை தந்தவர் அவர்..
pan.. India.. என இன்று.. மோதும்.. அலைக்கு 1950 களிலேயே அஸ்திவாரம் போட்டவர்..
அமெரிக்காவில் மட்டுமே.. ஒரு மில்லியனை தாண்டிய பொருட் செலவில்.. படங்கள் எடுக்கப் பட்ட கால கட்டத்தில்… முதன் முதலாக.. மூன்று மில்லியன் செலவில்.. படத்தை தயாரித்து இயக்கி சரித்திரம் படைத்தவர்..!
பிறந்தது… 1904 ம் வருடம்..தஞ்சை தரணியில் உள்ள திருத்துறைப் பூண்டியில்..!
தந்தையின் மறைவுக்குப் பின்.. மதராஸ் பட்டண வாசம்..!
பட்டதாரியாகி.. பல பணிகளைச் செய்து.. ஆனந்த விகடன்.. இதழை வாங்கி.. நடத்தி.. வெற்றி கண்டவர்..
எழுத்தாளர்.. மொழிப் பெயர்ப்பாளர்.. பத்திரிக்கை நிறுவனர் என பன்முக வித்தகராக வளர்ந்தார் !..
1936 ல் அவர் எழுதிய சதி லீலாவதி கதை.. திரைப்படமாக உருவான பிறகு அவர் திரைப்படத் துறையில் தடம் பதித்தார்..
சதி லீலாவதி படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் ஆனார்.. யோகஸ்தரும் ஆனார்..!..
1940 ல் Motion Picture producers combine ஐ வாங்கி.. ஜெமினி ஸ்டூடியோஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை அமைத்தார்..
ஜெமினி ஃபிலிம் லேபராட்டரீஸ்,… ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்.. நிறுவனங்களை உருவாக்கினார்.!..
வரலாற்றில் இடம் பிடித்த பல வெற்றித் தமிழ்ப் படங்களை தயாரித்தார்..!
மங்கம்மா .!. நந்தனார் …! பால நாகம்மா..!. மிஸ்..மாலினி…! வஞ்சிக் கோட்டை வாலிபன்.!..வாழ்க்கைப் படகு….! நடிகர் திலகத்தின் மோட்டார் சுந்தரம் பிள்ளை..! மக்கள் திலகத்தின் நூறாவது படமென்ற சிறப்புப் பெற்ற ஒளி விளக்கு.. என அவர் உருவாக்கிய வெற்றிப் படங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்..!
1942 ல் வெளி வந்து நன்றாக ஓடிய பால நாகம்மா.. மங்கம்மா சபதம்.. போன்ற படங்கள்.. நாயகியை முக்கியத்துவப் படுத்தி எடுக்கப் பட்டவை.. அதே வகையில் அவர்.. எடுக்க நினைத்து உருவான படம்தான்.. சந்திரலேகா..
காலம்.. சந்திரலேகா திரைப் படத்தை அவரே இயக்கும்.. கட்டாயத்தை உருவாக்கியது!.
கதாசிரியர் வேப்பத்தூர் கிட்டு …
ஜார்ஜ் ரேனால்ட் அவர்கள் எழுதிய..
‘Robert maccaire or A French Bandit in England ‘ என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருந்த ஒரு poem ஆல்.. ஈர்க்கப் பட்டு.. உருவாக்கியதுதான்.. சந்திரலேகாவின் கதை..!
‘ஒரு நள்ளிரவு..! இருள் மயமான.. பாதையில் வரும்.. ஒரு குதிரை வண்டி ..! அதன்.. கேரவன் உள்ளே.. ஒரு அழகிய கிராமிய நாட்டியக் காரி.!. அவளை மடக்கிப் பிடிக்கும்.. காட்டு கொள்ளையன்.. !அவன் மிரட்டலுக்கு அடி பணியும் அந்த மங்கை..’
என்ற ஆங்கில புத்தக காட்சி.. வேம்பத்தூர் கிட்டு அவர்களால்.. கதை வடிவம் பெற..
ஜெமினி கதை இலாகா.. திரைக்கதை வசனம்.. எழுத..
Blood and sand , The Mask of Zorro, Robinhood,
Thief of Baghdad,Benhur போன்ற ஆங்கிலப் படங்களின் பல காட்சிகளை தழுவி.. பிரமாண்டமாய் Script உருவானது..!
திரு எஸ்.எஸ்.வாசன் அவர்கள் மிகுந்த பொருட் செலவில்.. எந்த வித காம்ப்ரமைஸும் இல்லாமல்.. செலவு செய்து.. படத்தை உருவாக்க முனைந்தார்!
வெண்ணை திரளும் வேளை….
சந்திரலேகா படத்துக்கு.. ஒரு பெரிய சோதனை வந்தது..!
அது.. என்ன?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

