Thursday, February 5, 2026
HomeUncategorizedஸ்டார்ட் ... ஆக்ஷன் அத்தியாயம். 16. இயக்குனர். பீம்சிங்!

ஸ்டார்ட் … ஆக்ஷன் அத்தியாயம். 16. இயக்குனர். பீம்சிங்!

ஸ்டார்ட் … ஆக் ஷன்

அத்தியாயம். 16.

இயக்குனர். பீம்சிங்.

திரு.சந்திரபாபு.. அவர்கள்.. கதை.. எழுதி.. கதாநாயகனாக நடிக்கும்..‘அப்துல்லா’  திரைப் படத்தை எடுக்க ஆரம்பித்து பாதியில் படம் தடங்கி நிற்கும் நிலையில் நான்கரை லட்சம் ரூபாயையும் இழந்து விடப் போகிறோமோ என்ற  பயத்தில்.. தவித்தார் இயக்குனர் பீம்சிங் அவர்கள்!.  ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தது!. அவர் படத்தைப் பார்த்து அந்தக் கதையின்  அருமையை உணர்ந்து… ‘அந்தப் படத்தை வேறு நடிகர்களை வைத்து பெரிய அளவில் படமாக்கலாம்!..AVM நிறுவனம்… இணைந்து தயாரிக்கலாம்!..’ என்று அபிப்ராயப் பட்டார்..!

இயக்குனர். பீம்சிங் அவர்களுக்குப் போன உயிர் வந்தது..!

‘அப்துல்லா’ படத்தின் பெயரை ‘பாவ மன்னிப்பு’ என்று மாற்றினார்!..

நடிகர் திலகம்.சிவாஜி கணேசன்… B சரோஜாதேவி..டி.எஸ்.பாலையா …. 

எம்.ஆர்.ராதா… என்று பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படம் வளர்ந்தது!

1961 இல்..‘பாவ மன்னிப்பு’ திரைப் படம்

வெளியாகி…மிகப் பெரிய வெற்றி அடைந்தது!.

அந்த ஆண்டின்.. அகில இந்திய திரைப்பட பிரிவில்.. இரண்டாவது சிறந்த படமாக மத்திய அரசின் பரிசைப் பெற்றது!..

இந்து – இஸ்லாமிய மதங்களின்.. மத நல்லிணக்க ஒற்றுமையைப் பறை சாற்றும் படமாக அமைந்தது!

திரு பீம்சிங் அவர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை தந்தார்!..

1962 இல் ‘படித்தால் மட்டும் போதுமா’!.. ‘பார்த்தால் பசி தீரும்’!.. வெளியாகி.. வெற்றி கண்டன!..

தமிழைத் தவிர  ஹிந்தி .. தெலுங்கு கன்னடம்.. மலையாளம் என்று பிற மொழி படங்களையும் இயக்கினார்!.. அத்தனையும் வெற்றி படங்களாக அமைந்தன!

இயக்குனர்  பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் 1965 இல் வெளி வந்த ‘சாந்தி’ ஒரு மறக்க முடியாத படம்!.

T.M.சௌந்தர்ராஜன் அவர்கள் உணர்ச்சி பூர்வமாகப் பாடிய ‘யார் அந்த நிலவு’ என்ற பாடலில்.. நடிப்பது.. திரு.சிவாஜி அவர்களுக்கு பெருத்த சவாலாக அமைந்தது..!

சில நாள் படப் பிடிப்பை ஒத்தி வைத்து.. தனக்குள் நடித்து.. ஒத்திகைப் பார்த்த பின்னரே திரு.சிவாஜி. அவர்கள்.. அந்தப் பாடல் காட்சியில்.. நடித்தார்!

படம்.. சென்சார்.. பிரச்னையில்.. மாட்டிக் கொண்டது..! படத்தின்.. கருவை வைத்து.. படத்திற்கு ‘A’ சான்றிதழ் தந்தது.. சென்சார் போர்ட்..!. குடும்பத்தோடு அந்தப் படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக.. சில காட்சிகளை மாற்றி..  ‘U’ சான்றிதழ் பெற்றார்….இயக்குனர். பீம்சிங்.. அவர்கள்!

இதில் ..12 நாட்கள் தள்ளியே ‘சாந்தி’

திரைப்படம்.. வெளியானது!..

பெரிய பலூனை வானில்.. பறக்கவிட்டு.. சாந்தி படத்திற்கு விளம்பரம் செய்யப் பட்டது!. வானில்.. விளம்பரம்.. வந்த முதல் படம்  ‘சாந்தி’ தான்!

திரு. சிவாஜி கணேசன் அவர்கள்.. விலைக்கு வாங்கிய சாந்தி தியேட்டரில்  ‘சாந்தி’ திரைப் படம் வெளியானது!.. வெள்ளி விழா கண்டது!..

சாந்தி தியேட்டரில் வெளியான முதல் படமே வெள்ளி விழா படம் என்ற பெருமை கிடைத்தது!..

இயக்குனர்.. பீம்சிங்.. அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம்.. அவரது.. எடிட்டிங் அறிவு!

இயக்குனர் பீம்சிங் அவர்கள் … வசனகர்த்தா எழுதித் தருவதில் எதையும்.. குறைக்காமல் ..அப்படியே படமாக்குவார்!

எடுத்த படத்தின்.. Double positive ஐ அவர் எடிட்டிங் செய்வதே ஒரு வித்தியாசமான முறை!..

மூவியாலா என்று சொல்லப்படும் படத் தொகுப்பு கருவியில் படத்தை ஓட விட்டு கண்ணை மூடிக் கொண்டு காட்சியை கேட்பார்! வசனங்களில் கட் மார்க் செய்வார்!. பிறகு அந்த கட் மார்க்கிற்கு  தகுந்தபடி காட்சியை மறுபடி இணைக்கச் செய்வார்!

எந்த இடத்தில் Visual Jerk இருக்கிறதோ… அந்த இடங்களை மார்க் செய்து.. கடைசி நாளில் Patch work  செய்து … close up shot களாக படமெடுப்பார்! காட்சியை கோர்வை படுத்துவார்! இந்த அணுகு முறை அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது !..

இயக்குனர் பீம்சிங் அவர்கள் இயக்கிய மற்றும் ஒரு மறக்க முடியாத திரைப்படம் 1976 இல் வந்த ‘கணவன்- மனைவி’!..

இந்த திரைப் படத்தில் கதாநாயகனாக முத்துராமன் அவர்களும்.. கதாநாயகியாக செல்வி.ஜெயலலிதா அவர்களும்.. நடித்தார்கள்! திரு. கலைஞானம்.. அவர்களின் வித்தியாசமான கதைக் களத்தோடு வெளி வந்த இந்த படம்  பெரிய வெற்றி பெற்றது!.. பிற மொழிகளிலும்.. தயாரிக்கப் பட்டது!

வசனங்களுக்கும் … பாடல்களுக்கும் …. முக்கியத்துவம் தந்து எந்த அளவுக்கு இயக்குனர் பீம்சிங் அவர்கள் … வெற்றி படங்களை தந்தாரோ அதைப் போலவே பிரபல எழுத்தாளர்களின் நாவல்களையும் ஜீவன் குறையாமல் மூல கதையில் இருந்த அழுத்தம் மாறாமல் இயக்கி சில  வெற்றிப் படங்களையும் தந்திருக்கிறார்!.. 

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் அன்றைய கால கட்டத்தில் … எழுத்து சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் !.

அவரே அவரது கதைகளை தழுவி எடுக்கப் பட்ட..‘ யாருக்காக அழுதான்’..’ உன்னைப் போல ஒருவன்’…

‘புதுச் செருப்பு கடிக்கும்’… போன்ற படங்கள் தோல்வி கண்டதால்.. திரையுலகமே தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கி விட்டவர்!.

அவர் ஆனந்த விகடன் இதழில்.. 1968 இல் எழுதிய  ‘அக்னிப் பிரவேசம்’ .. என்ற கதையை.. விரிவாக 1970  இல் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.. என்ற பெயரில்.. தொடராக எழுதி … 1972 இல் சாகித்ய அகாடமி.. பரிசும் பெற்றார்..!

அந்த நாவலை அதே பெயரில் படமாக இயக்கி …மாபெரும் வெற்றி படைத்தவர் இயக்குனர் பீம்சிங் அவர்கள்!..

பிற் போக்குத் தனத்தை சாடி..புரட்சிகரமாக சொல்லப்பட்ட.. கருத்துகள் !.. திருமதி. லக்ஷ்மியின் தேர்ந்த நடிப்பு.. நாவலின் ஜீவன் கெடாத நேர்த்தியான.. நவீன.. Takings கலந்து படமாக்கிய இயக்குனர் பீம்சிங் அவர்களின் இயக்கம்.. என பல சிறப்பம்சங்கள் படத்தை..பெயர் பெற வைத்தன!

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மற்றும் ஒரு நாவலான  ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ இயக்குனர் பீம்சிங் அவர்கள் கை வண்ணத்தில் மலர்ந்த மறக்க முடியாத மற்றுமொரு படமாக அமைந்தது!..

ஜெயகாந்தன் அவர்களின் ‘கருணை உள்ளம்’ நாவலை இயக்குனர் பீம்சிங் அவர்கள் இயக்கும் கால கட்டத்தில் …

1978 ஆம்.. வருடம்.. தன் 54 ஆவது வயதில்.. காலமானார்!.

பீம்பாய்.. என்று நடிகர் திலகம் அவர்களால் செல்லமாக அழைக்கப் பட்ட.. பீம்சிங்.. அவர்களின் திரைப்படங்கள் என்றென்றும்.. தமிழ்த் திரையுலகில்.. ஜொலித்துக் கொண்டிருக்கும்!..

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments