Thursday, March 5, 2026
HomeUncategorizedசார்பட்டா பரம்பரை யாருக்காக எழுதப்பட்ட கதை?

சார்பட்டா பரம்பரை யாருக்காக எழுதப்பட்ட கதை?

சார்பட்டா பரம்பரை உண்மையில் இந்தக் கதை ஆர்யாவுக்காக எழுதப்பட்டது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட வருடங்களாகவே ‘சார்பட்டா பரம்பரை’ என்ற கதையில் பா.இரஞ்சித் பணிபுரிந்து வருகிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

‘மெட்ராஸ்’ படத்துக்கு முன்னதாக கார்த்தியிடம் ‘சார்பட்டா பரம்பரை’ படம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் நடிக்க கார்த்தி தயாராக இல்லை என்றவுடன்தான் ‘மெட்ராஸ்’ படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

அதேபோல் ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்கவிருந்தார் பா.இரஞ்சித். இதற்காக சூர்யாவிடம் சொன்ன கதையும் ‘சார்பட்டா பரம்பரை’ தான். அப்போது ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களின் விமர்சனத்தால் சூர்யா தயாராக இல்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments