Thursday, March 5, 2026
HomeUncategorizedஎதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

திமுக தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த கோரி நாடு முழுவதும் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி:-

சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக ஆட்சி அமைத்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள் இன்னம் நிறைவேற்றப்படவில்லை.

பெட்ரோல் ரூ.5ம், டீசல் ரூ.4ம் குறைக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என்கிற வாக்குறுதி என்ன ஆனது தற்போது எந்த முறையில் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது என்பது கூட தெரியவில்லை. தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையில் குளறுபடி உள்ளது. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2011ல் திமுக ஆட்சியில் இருந்து சென்ற போதும் ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு வராது என்றால் மகிழ்ச்சி- லாட்டரி சீட்டுகள் வராது என்கிற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். 

இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments