Tuesday, February 3, 2026
Homeசெய்திகள்கல்வியைப் பற்றி காஞ்சி மாமுனி சொன்னது என்ன ?-சிறப்பு கட்டுரை!

கல்வியைப் பற்றி காஞ்சி மாமுனி சொன்னது என்ன ?-சிறப்பு கட்டுரை!

கல்வியைப் பற்றி காஞ்சி மாமுனி சொன்னது என்ன ?

மு.பழனிவாசன்

            கல்வியின் பெருமையை பிரபலப்படுத்துவதற்காக தமிழக கல்வித்துறை ஒரு பெண்ணை வைத்து விளம்பரப்படுத்த வீடியோ எடுத்ததாகவும், ”அந்த பெண்மணி அதற்கு தகுதிபடைத்தவரல்ல”என்றும் சமூக வலைதளங்களில் குமுறல் அதிகமாக காணப் படுகின்றன. இதற்குமுன் என்னதான் அந்த பெண்மணி செய்துவிட்டார்? என்று தேடிப் பார்த்தபோதுதான் நெட்டிசன்கள் வறுத்தெடுப்பது சரியே.. என்று மனம் ஒப்புக் கொண்டது. காரணம், அந்த அம்மணி தன் அங்க அவயங்களைக்காட்டுவது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை கண்டேன். “கலவித்துறை” புரமோஷனுக்கு என்றால் அந்த அம்மணி சரிபட்டு வரலாம். ஆனால்.. கல்வித்துறைக்கு? பாவம்.. ”எப்படி இருந்த கல்வித்துறை இப்படியாகி விட்டதே!” என்றுதான் நொந்துகொள்ளும்படிதான் உள்ளது.

            தமிழக கல்வித்துறை நிலவரம் மேலேசொன்னபடி இயங்கி வர, 1934 ஆண்டு ”பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளைஞர்களுக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்?” என்று காஞ்சி மாமுனி மஹா பெரியவர் அவர்கள் பேசியதைக் குறிப்பிட்டு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது கண்ணில்பட்டது.

காஞ்சி மகாமுனியாம் மஹாபெரியவா அவர்களின் வழிகாட்டுதலின் சாரம்சம் இதோ:

இளைஞர்கள் மூன்றுவிதமான கல்வியைப்பயில வேண்டும்.

முதல் வகை:

    தற்கால உலகியல் வாழ்விற்குத் தேவையான கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை கருத்தூன்றி படித்து தேர்ச்சி பெற வேண்டும்.

    • இரண்டாம் வகை:

    தர்மம், பக்தி மார்க்கம் சம்பந்தமான அவரவர் குடும்ப வழக்கம், ஆச்சார அனுஷ்டானங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

    • மூன்றாம் வகை:

    சமுதாயத்திற்கு (சாதிக்கூட்டமல்ல. ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கு) சேவை செய்யும் நோக்கில்,  சமுதாயம் எப்படியெல்லாம் செயல்படுகிறது?  நல்லறப் பணிகளை தொடர்ந்து எப்படி செய்ய வேண்டும்? எவ்வாறு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்? என்பதைக் கற்றுக்கொள்வது.

    நன்கு யோசித்துப்பார்த்தால் 1934-இல் மகா பெரியவா ஆற்றிய உரை இன்றைய கல்வியின் சூழலுக்கு ஏற்ற அறிவுரைகள் என்பதை மெய்யான பகுத்தறிவு கொண்டவர்கள் புரிந்து உணர்ந்து கொள்வர்.

          இன்று அவரவர் திறமை, ஆர்வம், லட்சியத்திற்கு ஏற்ப கணிதம், அறிவியல், வரலாறு, பூகோளம் உள்ளிட்ட வாழ்வியலுக்கு பொருள் ஆதாரத்தினை வழங்கக்கூடிய படிப்புகள் இருக்கின்றன. அவற்றினை தவிர்த்துவிட்டு எதையும் செய்யமுடியாது என்கிற நிலைப்பாடு ஆணிவேராக ஊன்றிவிட்டது. ஆகவே அந்த பாதையில் கட்டாயம் பயணித்தே ஆகவே வேண்டும்.

          ஆனால் அந்த ஏட்டுச்சுரைக்காய் மட்டுமே வாழ்விற்கான ஊட்டமாக அமையுமா? என்றால் நிச்சயம் இல்லை. ஏன்?

          மஹா பெரியவா கூறிய வாழ்வியலுக்கான நல்லறச் சிந்தனைகளுடன் செயல்பட்டு வாழ, ஒரு பாதையில் பயணித்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. அதற்கு இளைய சமுதாயத்தில் ஆண், பெண் ஆகிய இருபாலரும் தங்களைத் தாங்களே பக்குவப் படுத்திக்கொள்ள, தங்கள் கலாச்சாரத்தினை, அதன் மேன்மையை நன்குணர்ந்து, தனி மனித ஒழுக்கத்துடன் வாழவேண்டும். அவ்வாறு ஒவ்வொருவரும் வாழத்தொடங்கி விட்டால், மனித தர்மத்திற்குட்பட்ட அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். அவற்றை பக்தியின் மூலம் நிச்சயம் அடையலாம். கடவுள் நம்பிக்கை, பக்தி பெருக்கம் ஆகியவை ஒரு மனிதனின் அகவொழுக்கம், புறவொழுக்கம் ஆகியவற்றை அப்பழுக்கின்றி மேம்படுத்தும். இதன் மூலம் அறநெறிகளின் அடிப்படையைப்புரிந்து கொண்டு அவற்றின்படி செயலாற்ற முடியும்.

          சரி.. வாழ்க்கைக்குத் தேவையான படிப்பு சம்பந்தமானதை படித்தாயிற்று. பொருளாதாரத்தை மேம்படுத்த வழி கிட்டியாயிற்று. இத்துடன் முடிந்துவிடுவதா வாழ்க்கை? நிச்சயமாக இல்லை என்பதே மஹாபெரிவரின் தீர்க்கமான கருத்து. எப்படி?

          தன் வீடு, தன் குடும்பம் என்று வாழ்ந்து மறைந்தால் போதுமா? உண்மையில் அது முழுமையான வாழ்க்கை ஆகாது. வேறெந்த வகையில் முழுமையாகும்? அதுதான் மனிதகுலத்திற்கான சேவை. அந்த சேவையினை வழங்க, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மானிடத்தினிடையே பாரபட்சமற்ற சிநேகம் கொள்ள வேண்டும். இவற்றை செய்யும்போதுதான் வாழ்க்கை பூரணநிலையை எய்துகிறது.

    ஆக, இந்த மூன்றாம் நிலைக்கு வருவதற்காகவே முதலில் பொருளாதாரத்திற்காக அது சார்ந்த கல்வி, அந்த கல்வியுடன் நல்லொழுக்கம், உயர்நிலைப் பண்புகள் மிகுந்துவாழ, இறையச்சம் மிகுந்த பக்தி அவசிய மாகிறது. இவை இரண்டின் மூலமே மனிதகுலத்திற்கு சேவை செய்யும் தகுதியை எட்டிப்பிடித்து வாழ்வின் பூரணத்தை எய்த முடியும். இதுவே நிதர்சனம்.

    லெளகீக வாழ்விலிருந்து விலகி சுத்த சந்நியாசியாக வாழ்ந்து, தெய்வநிலைக்கு உயர்ந்துவிட்ட காஞ்சி மஹா பெரியவர் அவர்கள் கல்வி பற்றிய மொழிந்த கருத்தும், இளைஞர்களுக்கான அறிவுரையும் உண்மையிலேயே ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும், அவரவர் இல்லங்களிலும் போற்றி பின்பற்றத்தக்கது.

     தற்கால கல்வித்துறையின் நிலைமை அவ்வாறில்லை. குத்தாட்டக்குமரிகள், தத்துபித்து தத்துவவாதிகள், ஆபாச அலங்காரத்தேவதைகள், பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நவீன கோட்பாடுகளுடன் செயல்படும் கூட்டதினிடையே கல்வித்துறை சிக்கி சீரழிவது மகா வேதனை தரக்கூடியதாக இருக்கிறது.  

    தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் தங்களின் அரசியல் நிலைப்பாடு அரசியல் காரணமாக மஹா பெரியவர் அவர்களின் கூற்றி கண்டு கொள்ளாமல் போகக்கூடும். பெற்றோர் ஒவ்வொருவரும் கட்டாயம் அவர் கூறியதை அப்படியே ஏற்க வேண்டும் என்பதே என் பேரவா.

    மு.பழனிவாசன்

    Also Read: https://madrasmixture.com/real-and-ai-technology-comparison-advantages-and-disadvantages/

    RELATED ARTICLES
    - Advertisment -

    Most Popular

    Recent Comments