Thursday, May 14, 2026
Homeசெய்திகள்தமிழக நிதி நிலை குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடும் விஜய் அரசு!

தமிழக நிதி நிலை குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடும் விஜய் அரசு!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த அறிக்கை மற்றும் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடுவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்கிறார்.

கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசின் நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதியளித்திருந்தார்.

அதன்படி, நிதித் துறை அதிகாரிகளுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தின் உண்மையான நிதி நிலையை மக்களுக்குத் தெரிவிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments