Thursday, May 14, 2026
Homeசெய்திகள்தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா? ₹2,500 காத்திருக்கும் பெண்கள்!

தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா? ₹2,500 காத்திருக்கும் பெண்கள்!

திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மே மாதத்திற்கான தவணை, நாளை தமிழக வெற்றிக் கழக அரசால் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பழைய முறையிலேயே இந்த மாதமும் தலா 1,000 ரூபாய் மட்டுமே விடுவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, இந்தத் தொகையை மாதம் 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான நிர்வாக நடைமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அந்த உயர்வு அமலுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments