தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பணிக்காலம் நிறைவுபெற்று பணி நீட்டிப்பில் இருந்த இவருக்கு, வரும் நவம்பர் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே, தற்போது சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துவிட்டுப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
அதிமுக மற்றும் திமுக என இருவேறு மாற்று முகாம் ஆட்சிகளிலும் சட்டப்பேரவைச் செயலாளராகத் தொடர்ந்து திறம்படப் பணியாற்றிய அனுபவம் கொண்ட சீனிவாசனின் இந்தத் திடீர் முடிவு, தற்போதைய அரசியல் மற்றும் அதிகாரத்துவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

