தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. தூத்துக்குடி,மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், நெல்லை ஆகிய தென் மாவட்டங்களில் கோடைகாலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. நேற்றைய (10-09-2021) நிலவரப்படி, தமிழகத்திலேயே மிக அதிகப்படியான வெப்பநிலை கோவில்பட்டியில் பதிவாகியுள்ளது. கோவில்பட்டி -103 °F தூத்துக்குடி -102 ° F மதுரை -102° F விருதுநகர் -101° F திருச்செந்தூர் -99°F நாமக்கல் -99°F ஈரோடு -99°F திருநெல்வேலி -98°F தென்மாவட்டங்களுக்கான சிறப்பு வானிலை அறிக்கை : தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான வெயில் நிலவி வருகிறது இதே நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும். அடுத்த ஒரு வாரத்திற்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
தென் மாவட்டங்களில் கடுமையான வெயில்
RELATED ARTICLES

