Saturday, March 7, 2026
HomeUncategorizedசெல்பி எடுத்து, செல்போன் திருட்டு போலீஸ் கமிஷனரிடம், நடிகர் விமல் புகார்

செல்பி எடுத்து, செல்போன் திருட்டு போலீஸ் கமிஷனரிடம், நடிகர் விமல் புகார்

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ரசிகர்கள் செல்பி எடுத்த நேரத்தில், என் செல்போனை திருடிவிட்டதாக, நடிகர் விமல் , போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விமல். இவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம்,  ஆன்லைன் மூலம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “கடந்த 12-ம்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ரசிகர்கள் என்னுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

அந்த நேரத்தில் என்னுடைய விலை உயர்ந்த செல்போனை  அங்கு ஒரு இடத்தில் வைத்திருந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது, அவை  காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  கடந்த 3 நாட்களாக அங்கு தேடி பார்த்தும் செல்போன்  கிடைக்கவில்லை. எனவே, காவல்துறையினர் எனது செல்போன் கண்டுபிடித்து, மீட்டுத் தரும்படி கேட்டு கொள்கிறேன்” என்று விமல் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments