Wednesday, March 11, 2026
HomeUncategorizedஇன்று கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு தடை

இன்று கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு தடை

மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை முதல் வரும் 28-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல், குமரிக் கடல் பகுதிகளில் வரும் 28ம் தேதி வரை, மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments